உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் எட்டு மாதங்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு உக்ரைன் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உக்ரைன் எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் நாட்டின் பல நகரங்கள் மற்றும் பிராந்தியங்களில் மின்சார உள்கட்டமைப்பு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மின்தடைகளை சரி செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உக்ரைன் மக்களுக்கு உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்திருப்பதாக அந்த நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த ட்ரோன்களை போரில் ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அளிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.