Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… எரிவாயு குழாய் வெடிப்பு… 3 பேர் பலி…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது.

1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்கிறது. இந்த எரிவாயு குழாய் உக்ரைனுக்குள் நுழைந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யாவின் சுவாஷியா பிராந்தியத்தில் இருக்கும் எரிவாயு குழாயில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |