Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. கூடுதல் ஆயுத உதவிகள்…. ஸ்வீடன் அரசின் அறிவிப்பு….!!

உக்ரைனுக்கு 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள்  வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 100வது நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய உக்ரைனில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ரஷ்யப் படைகள் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு மாதக்கணக்கில் நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போர் சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் தேவை என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் அதிபரின் வேண்டுகோளை ஏற்று ரஷிய  அந்நாட்டுக்கு கூடுதல் ஆயுத உதவிகள் வழங்குவதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் ரஷியா அதிக கவனம் செலுத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில் ரஷிய தாக்குதலை எதிர்கொள்ள ஏதுவாக ரோபோக்கள், தானியங்கி துப்பாக்கிகள், வெடி மருந்துகள், 5 ஆயிரம் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், மற்றும்  நிதி உதவிகள் ஆகியவை உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |