Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்!…. கைப்பற்றப்பட்ட கிரெமின்னா…. பிராந்திய கவர்னர் அறிவிப்பு…..!!!!!

உக்ரைனின் கிழக்குபகுதி நகரமான கிரெமின்னாவை ரஷ்யப்படைகள் கைப்பற்றி உள்ளதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில், ரஷ்யாவின் புது தாக்குதலில் கைப்பற்றப்பட்ட முதல் நகரம் கிரெமின்னா என்று கூறப்படுகிறது. கிரெமின்னா, தலைநகர் கீவிலிருந்து தென் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகும். தற்போது லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் Serhiy Gaidai கூறியிருப்பதாவது, கிரெமின்னா இப்போது ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே அவர்கள் நகருக்குள் நுழைந்து விட்டனர்.

நம் உக்ரைனிய படைகள் பின் வாங்கிவிட்டது. அவர்கள் புதிய நிலைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் மற்றும் ரஷ்ய ராணுவத்துடன் தொடர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யப்படைகள் அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கினர். பொதுமக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது சாத்தியம் கிடையாது. எங்களிடம் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. சுமார் 200 நபர்கள் இறந்துள்ளனர். ஆனால் உண்மையாக இன்னும் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என Serhiy Gaidai தெரிவித்துள்ளார்.

Categories

Tech |