Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்….!!!!!

ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள்  ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது உடனடியாக சாத்தியப்படக் கூடிய விஷயமல்ல என ஜெர்மனி நிதி அமைச்சர் லிண்ட்னெர் கூறியுள்ளார்.

Categories

Tech |