உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷிய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் 2 லட்சம் ராணுவ வீரர்களை, எல்லையில் ரஷ்யா குவித்து இருக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும்படி திமுக எம்பி எம்.எம் அப்துல்லா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உக்ரைன்-ரஷ்யா போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் வழியாக விரைந்து உதவும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.