Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….”தெற்கு உக்ரைனில் ரஷ்யா கண்மூடித்தனமான ஏவுகணை வீச்சு”….!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு உக்ரைனில்  தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ரஷ்யா தீவிரம்  காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு பகல் பார்க்காமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில்  ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும்  அந்த நாட்டின் முக்கிய துறைமுகமான ஒடேசாவிற்கும் இடையே கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ நகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா ராணுவம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

ஆனால் அப்போது உகிரைன் படைகள் அதனை முறியடித்துள்ளன. இந்த சூழலில் மைக்கோலைவ்  நகரை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ரஷ்ய பணிகள் மீண்டும் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் நேற்று மைக்கோலைவ்  நகர் மீது ரஷ்ய  படைகள்  சாராமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளன. அந்த நகரில் உள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் உட்பட தொழில்துறை அமைப்புகள் மற்றும் பொது உள்கட்ட அமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Categories

Tech |