உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது.
இதனால் உக்ரைன் ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எல்.சி.ஐ தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ரஷ்ய ஜனாதிபதி புடினின் முகத்தில் நான் குத்த தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார். அதற்கான முதல் வாய்ப்பு நாளைய நாளாக இருந்தாலும் கூட நான் தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.