உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
கீவ் புறநகர் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறி உக்ரைனின் தெற்கு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளனர். இதில் புச்சா நகரம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மஞ்சள் மற்றும் நீல நிற கண்ணாடி பாட்டில்களில் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்நாட்டின் வரைபட வடிவில் வைத்து உக்ரைன் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.