உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இந்தியர்களை மீட்பதற்காக சென்றுள்ள ஏர் இந்தியா விமானம் NOTAM எனப்படும் வான் தாக்குதல் எச்சரிக்கையை குறிப்பிட்டு நடுவழியில் தவித்து வருகிறது.
இந்நிலையில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்தும், உக்ரைன் மீதான போர் பதற்றம் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.