உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 109 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியது, “இங்கிலாந்து ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்கு சென்றார். அப்போது சீவிரோடோனேட்ஸ்க் நகரில் உக்ரைன் நாட்டிற்காக போரிட்டப்போது கொல்லப்பட்டுள்ளார்” என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.