உக்ரைன் ரயில்நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 45 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது அந்த ரயில் நிலையத்தை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரயில் நிலையத்தில் இருந்து பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளர். இந்த நிலையில், கர்மொடொர்ஸ்க் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக அந்த மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
ரஷிய ஏவுகணை தாக்குதல் நடந்தபோது ரெயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 4 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கு இருந்ததாக கவர்னர் அறிவித்துள்ளார். அதேநேரம், ரெயில் நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.