உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 108 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கியதிலிருந்து அந்நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி விதி அமல்படுத்தப்பட்டது இந்நிலையில் உக்ரேனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளிவர அனுமதி வழங்க வேண்டும் என்ற மனுவை அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் உக்ரேன் அரசியலமைப்பின் பிரிவு 17 ஐ மேற்கோள் காட்டிப் பேசினார். அரசியலமைப்பின் 17 ஐ பிரிவு என்பது நாட்டில் உள்ள ஆண்கள் தங்கள் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க கட்டாயப் படுத்தப் படுகிறது.
அதனைப் போலவே அரசியலமைப்பின் பிரிவு 64 ஐ மேற்கோள் காட்டியுள்ளார். அதாவது இராணுவச் சட்டம் அமலில் உள்ள போது குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரகளில் மட்டுப்படுத்த அனுமதிக்கும் இந்த சட்டப்பிரிவு 64 ஐ அவரது நிர்வாக கடந்த பிப்ரவரி 14 அன்று விதித்தது. அதனை அடுத்த 30 நாட்களுக்கு நீடிப்பு செய்துள்ளார். இது குறித்து அவர் காணொளியில் பேசியது, “ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்க ராணுவத்துடன் இணைந்து தனது அரசு செயல்படும். அதே நேரத்தில் பொதுமக்கள் பீதி தவிர்க்கவும். அதற்கு பதிலாக சண்டையிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். உக்ரேனில் நாட்டில் பிராந்திய ஒருமைப்பாடிற்காக போராடுவது மக்களின் பொறுப்பாகும். நாம் வலிமையானவர்கள், எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோம். நாம் உக்ரேனியர்கள் என்பதால் அனைவரையும் தோற்கடிப்போம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.