Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….32,950 ரஷ்ய வீரர்கள் பலி…. உக்ரேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!!

போர்  தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததன் காரணத்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலக அளவில் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டிருக்கின்றது. இரு தரப்பிலும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

மேலும் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன்  வர மறுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் உக்ரைனில் ஆக்கிரமிப்பு பகுதிகளை விட்டு ரஷ்யா தன்னுடைய தடையை திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில் படிப்படியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படை கைப்பற்றி வருகிறது. இதற்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 32 ஆயிரத்து 950 ரஷ்ய வீரர்கள் பலியாகியிருப்பதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் கூறியுள்ளார்.

மேலும் 1,449 ஆயுதப் போர் டாங்கிகள், 3,545 போர் கவச வாகனங்கள், 729 பீரங்கி அமைப்புகள், 97 வான் பாதுகாப்பு அமைப்புகள், 213 போர் விமானங்கள், 179 ஹெலிகாப்டர்கள், 129 கப்பல் ஏவுகணைகள், 13 போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ரஷிய தரப்பு இழப்புகளின் பட்டியலையும் உக்ரைன் வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |