உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக 4 கோடி மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலகளாவிய மேம்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்புகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு மற்றும் எரிசக்தி பொருள்களுக்கான விலை உயர்ந்துள்ளது. இதனால் 4கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்றும், கடந்த 2007 மற்றும் 2010 ஆண்டுகளில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை விட அதிகமாக இருக்கும்.
மேலும் உலக கோதுமை ஏற்றுமதியில் கால் பங்கு அளவிற்கு அதிகமாக உக்ரைன் ரஷ்யாவில் கோதுமை ஏற்றுமதி இருக்கும் என்றும், கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகள் மாற்று பொருளுக்கு போட்டியிடுவதால் உணவுப்பொருட்களின் விலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.