Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா!…. மோடி மத்தியஸ்தராக செயல்பட்டால் வரவேற்போம்….. வெளியான தகவல்…..!!!!!!

உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, பிரதமரான நரேந்திரமோடி மத்தியஸ்தராக செயல்பட்டால் அதனை உக்ரைனியர்கள் வரவேற்பார்கள் என்று தெரிவித்தார். ரஷ்யாவுடனான தன்  செல்வாக்கைப் பயன்படுத்தி போரை நிறுத்துமாறு இந்தியாவை உக்ரைன்  மீண்டும் அறிவுறுத்தி கேட்டுக்கொண்டது. இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியிருப்பதாவது, “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலின்ஸ்கிக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில் மத்தியஸ்தராக மோடி செயல்பட விரும்பினால் அவரது முயற்சியை வரவேற்போம்.

உக்ரைன் இந்திய தயாரிப்புகளின் நம்பகமான நுகர்வோர் ஆவர். நாங்கள் எப்போதும் சூரியகாந்தி எண்ணெய், தானியங்கள் மற்றும் மற்ற பொருட்களை உங்களுக்கு விநியோகம் செய்கிறோம். இது வழக்கத்துக்கு மாறாக பயனுள்ள உறவு ஆகும். ரஷ்யா உடன் இந்தியா அனுபவிக்கும் உறவைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் போரை நிறுத்துமாறு அதிபர் விளாடிமிர் புதினை சமாதானப்படுத்த வேண்டும். ரஷ்யாவில் முடிவெடுக்கும் ஒரே மனிதர் அதிபர் புதின் மட்டுமே ஆவார். ஆகவே இப்போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்று அவருடன் நேரடியாகப் பேச வேண்டும்.
இந்த உலகத்தில் இப்போரை விரும்பும் ஒரேநபர் அதிபர் புதின் மட்டுமே ஆவார். உக்ரைனை இந்தியா தொடர்ச்சியாக ஆதரிக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். கார்கிவ் நகரில் ரஷ்ய குண்டு வெடிப்பின்போது இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு உக்ரைன் மந்திரி தன் இரங்கலையும் கூறினார். அதுமட்டுமல்லாமல் “ரஷியா போர் தொடங்குவதற்கு முன்புவரையிலும் உக்ரைன் இந்தியர்களின் மற்றொரு தாயகமாக விளங்கியது. அத்துடன் மாணவர்கள் திரும்பி வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |