Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. அவசர கூட்டதை போட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ….!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உக்ரைனின் நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய உக்ரைன் அதிபர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷியா முன்மொழிவதாகவும், பேச்சு வார்த்தை தடத்துவதற்கான  இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு அதிபர் மாளிகையில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இன்னும் காலம் கடந்து போகவில்லை, அதிபர் புதின் ரஷ்ய போரை தவிர்த்துவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது. “வெளியுறவு மந்திரி மற்றும் செயலாளர் ஆகியோர் உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ளதாகவும் அங்கு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும்” தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புதினுடன் ஒரே நாளில் இரண்டு முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அமெரிக்க அதிபர் பிரான்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனால் தான் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழ உள்ளது தகவல் வெளியானது.

இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாநிலங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று திடீர் அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்துள்ளதோடு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யா சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதிபர் புதின் டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாநிலங்களை ‘சுதந்திரமானவை’  என்று அங்கீகரிக்கும் முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன், ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர்  போனில் பேசியபோது உக்ரைனின் சுதந்திரத்தை பாதுகாக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று உத்தரவிட்டார். மேலும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து உக்ரேன் விவகாரம் தொடர்பாக இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |