பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நோட்டா அமைப்புகளின் அவசர உச்சி மாநாடு நடைபெறுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நோட்டா அமைப்பின் அவசர உச்சிமாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 30 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஜி-7 தலைவர்கள் கூட்டத்திலும் ஜோ பைடன் பங்கேற்று பேசுகிறார். மேலும் ஐரோப்பிய கவுன்சில் அமர்விலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளின் போது உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிப்பது மட்டுமல்லாமல், தற்போதைய தடைகளை மேலும் இறுக்குவது பற்றியும் தனது கூட்டாளிகளுடன் ஜோ பைடன் விவாதிக்க இருக்கிறார். பின்னர் போலந்து செல்கிற ஜோ பைடன் அங்கு உள்ள அமெரிக்க படையினரை சந்தித்து பேசுவார். இந்த தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியுள்ளார்.