ஈரானால் தாக்கப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர மேலும் சில உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், கடந்த ஜனவரி மாதம் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பறந்த உக்கிரைன் பயணிகள் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னரும் பல பயணிகள் உயிருடன் இருக்கின்றனர்.
இருந்தாலும் எச்சரிக்கை கிடைப்பதற்கு முன்னரே அடுத்த இருபத்தைந்து வினாடிக்குள் இரண்டாவது ஏவுகணை தாக்கியதால் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்நிலையில் பாதிப்படைந்த அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி ஈரானிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.