Categories
அரசியல்

“உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்….!!” மம்தா பானர்ஜி கடிதம்…!!

உக்ரைனில் 5-வது நாளாக போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பல்வேறு மீட்பு பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியாவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி போன்ற பகுதிகளுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |