ரஷ்யா, உக்ரைன் மீது 50-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் ஜோ பைடனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.