உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், பீஜிங் நகரில் உள்ள நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனின் நிலைமையை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை எல்லை மீறி போய் விடாமல் தடுக்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் புதினி நடவடிக்கை உக்ரேனில் இறையாண்மையை பாதிக்காத என்று கேட்கிறீர்கள். இது சிக்கலான வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்த கருத்தை ஐ.நா பொதுச்சபையில் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சீனாவுக்கான நிரந்தர பிரதிநிதி சான்றோன் பேசினார். அப்போது தற்போதைய சூழலில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிலும் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் பதற்றத்தை அழிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.