Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்: பிரான்ஸ் அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய சரக்கு கப்பல்…. அதிரடி காட்டிய பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் கடற்படை ரஷ்யாவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை பறிமுதல் செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. அந்த வகையில்,பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான கார்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய நாட்டுக்கு சொந்தமான ஒரு சரக்கு கப்பல் ஆங்கில கால்வாய் வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் பிரான்ஸ் கடற்படை மறித்து நிறுத்தி கப்பலை பறிமுதல் செய்தது.

இதனை அடுத்து அந்தக் கப்பலை பவுலோன்-சுர்-மெர் நகர துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதனை அறிந்த பிரான்சில் உள்ள  ரஷிய தூதரகம்,  தங்கள் நாட்டு சரக்கு கப்பல் பறிமுதல் செய்ததற்கான காரணம் என்ன என்று பிரான்ஸ் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு அவர்கள், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் காரணமாக அந்த நாட்டின் சரக்கு கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக பிரான்ஸ் அரசு விளக்கமளித்துள்ளது.

Categories

Tech |