ரஷ்யா கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யா சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பிற்கு பிறகு தனது முதல் கருத்துக்களை வெளியிட்ட அவர், ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை வெளிப்படைத் தன்மை உடையதாகவும், கடினமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அதிபர் Karl Nehammer, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அளித்த முக்கியமான செய்தி, “உக்ரைனில் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் உக்ரைன், ரஷ்யா இரு தரப்பிலும் போரில் தோல்வியுற்றவர்கள் மட்டுமே உள்ளனர்” என்று கூறியுள்ளார்.