Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்: “வாரீங்களா சார்”…. பேச்சுவார்த்தை நடத்துவோம்…. ரஷ்யாவுக்கு செல்லும் மந்திரி….!!

உக்ரைன் நாட்டுடனான எல்லை பிரச்சினையால் எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் போர் ஏற்படும் அபாயமுள்ளதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது.

இவ்வாறு இருக்க ரஷ்யா, உக்ரேன் நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை தடுக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரியான லீஸ் பதற்றத்தை தணிக்க ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ளார் .

Categories

Tech |