Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவாதம்… புதிய ராணுவ தளபதி நியமனம்…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 277 வது நாளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் போரில் கை பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க்,டோனெட்ஸ்க்,ஷபோரிஹியா,கெர்சன் ஆகிய நான்கு நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதமாகும் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதற்கிடையே போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது ரஷ்யப்படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகின்றது. மேலும் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் மீட்டு வருகின்ற நிலையில் இந்த பின்னடைவு ரஷ்யாவின் தோல்விக்கான அறிகுறியாக மேற்கத்திய நாடுகள் கட்டமைத்து வருகின்றது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை தலைமை தாக்குவதற்கு புதிய ராணுவ தளபதி ரஷ்யா இன்று நியமனம் செய்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான சிறப்பு நடவடிக்கைகளை தலைமை தாங்க ஜெனரல் செர்ஜி சுரொவ்கின் நியமிக்கப்பட்டிருக்கின்றதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |