Categories
அரசியல்

உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா?…. பண மோசடியில் இருந்து தப்பிக்க…. உடனே இத பண்ணுங்க….!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது.

அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பதற்கும் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பல்வேறு இடங்களில் விட்டுவிடுவோம். இது ஒரு சில சமயங்களில் நமக்கு ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஆதார் கார்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆவணம். இதனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது அதை தவறாக பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம், வயது,புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் நம்மால் எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். ஆதார் காடுகளில் உள்ள மாற்றங்களை சரிசெய்ய ஆதார் மையத்தில் அல்லது போஸ்ட் ஆபீசுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் மூலமாகவே இதனை செய்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆதார் கார்டை வைத்து பலரும் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். நமக்கே தெரியாமல் நமது ஆதார் கார்டை திருடி மோசடி செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆதார் கார்டு என்பது மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு ஆவணம். அதனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதி மற்றும் அவருடைய வங்கி கணக்கில் உள்ள பணம் திருட அதிகம் வாய்ப்புள்ளதாக ஆதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதனால் உங்களுடைய ஆதார் கார்டில் தற்போதைய மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். உங்களது மொபைல் தற்போது மாற்றப்பட்டு இருந்தால் புதிய மொபைல் நம்பரை நீங்கள் அப்டேட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.

Categories

Tech |