இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுப்பதற்கும் வேறு ஏதாவது காரணத்திற்காகவும் பல்வேறு இடங்களில் விட்டுவிடுவோம்.
இது ஒரு சில சமயங்களில் நமக்கு ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புள்ளது. அதனால் ஆதார் கார்டு மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆவணம். இதனை மற்றவர்களிடம் கொடுக்கும்போது அதை தவறாக பயன்படுத்த அதிகம் வாய்ப்புள்ளது. தற்போது ஆதார் கார்டை வைத்து கடன் வாங்கும் வசதியும் அதிகம் உள்ளது. அது மட்டுமல்லாமல் உங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடு போகும் வாய்ப்பு உள்ளது. இந்த மோசடியை தடுக்க அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் மொபைல் நம்பரை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கும்படி ஆதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி உங்களுடைய ஆதார் கார்டில் தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க myaadhaar.uidai.gov.in/verify-email.mobile என்ற முகவரியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரியையும் இதில் சரிபார்க்க முடியும். நம்மில் பெரும்பாலானோர் முதன்முதலில் ஆதார் வாங்கும்போது வைத்திருந்த மொபைல் நம்பரை அப்போது கொடுத்திருப்போம். இப்போது அந்த மொபைல் நம்பர் நம்மிடம் இருக்காது. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் மொபைல் நம்பரை அப்டேட் செய்து இருக்க வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்கு தான் ஆபத்து. எனவே இதுவரை மொபைல் நம்பரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே இந்த வேலையை முடியுங்கள்.