இந்தியாவில் ஆதார்அட்டை ஒரு கட்டாய ஆவணம் ஆகும். இந்த ஆவணம் இன்றி இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. இதனிடையில் யுஐடிஏஐ ஆதார் குறித்த தகவல்களை அவ்வப்போது வழங்குகிறது. ஆதார் சரி பார்ப்பு குறித்து அரசு புதிய விதியை உருவாக்கியுள்ளது. இவ்விதியின் கீழ் உங்களது ஆதாரை ஆப்லைனில் (அல்லது) இணையமின்றி (அல்லது) ஆன்லைனில் சரிபார்க்க முடியும். இது தொடர்பாக இதுவரையிலும் தெரியாதவர்கள் இப்பதிவின் வாயிலாக விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். அதாவது விதிகளின்படி, சரிபார்ப்பிற்காக டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை நீங்கள் தற்போது வழங்க வேண்டும். இந்த டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தினை ஆதாரின் அரசாங்க அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கவேண்டும். பயனாளரின் ஆதார் எண்ணின் கடைசி 4 எழுத்துக்கள் இந்த ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புது ஏற்பாட்டில் என்ன உள்ளது…?
இந்த புது விதியில் ஆதார் e-KYC சரிபார்ப்பு செயல்முறைக்காக ஆதார் வைத்து இருப்பவருக்கு ஆதார் காகிதம் இல்லாத ஆப்லைன் e-KYC ஐ அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிக்கு வழங்குவதற்கான விருப்பம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்குப்பின் ஏஜென்சி ஆதார் எண் மற்றும் ஆதார் வைத்திருப்பவர் வழங்கிய பெயர், முகவரி ஆகியவற்றை மைய தரவுத்தளத்துடன் பொருத்தும். பின் பொருத்தம் சரியானது என்று கண்டறியப்பட்டால் சரிபார்ப்பு செயல்முறை முன்னோக்கி கொண்டு செல்லப்படும். ஆதார் காகிதம் அற்ற ஆப்லைன் E-KYC என்பது யுஐடிஏஐ வாயிலாக வழங்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தில் ஆதார்எண், பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தின் கடைசி 4 எழுத்துக்கள் குறித்த தகவல்கள் இருக்கின்றன. அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இப்புதிய விதியின் கீழ் ஆதார் வைத்து இருப்பவர்கள் தங்களது e-KYC தரவு எதுவும் சேமிக்கப்படுவதற்கு சரிபார்ப்பு நிறுவனத்திற்கு மறுப்பும் தெரிவிக்கலாம். இதற்குரிய உரிமையை இவ்விதி வழங்குகிறது.
ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பின் வகைகள்:
விதிகளின் அடிப்படையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பின் வரும் வகைகளில் ஆப்லைன் சரிபார்ப்பு சேவைகளை வழங்கும்.
# கியூஆர் குறியீடு சரிபார்ப்பு
# ஆதார் காகிதம் அற்ற ஆப்லைன் E-KYC சரிபார்ப்பு
# மின் ஆதார் சரிபார்ப்பு
# ஆப்லைன் காகித அடிப்படையிலான சரிபார்ப்பு
ஆதார் சரிபார்ப்பு முறைகள்
ஆன்லைன் ஆதார் சரிபார்ப்புக்கு முன்பே உள்ள பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. ஆப்லைன் விருப்பங்களுடன் கிடைக்கக் கூடிய ஆதார் சரிபார்ப்பின் பலவகை முறைகள் பற்றி காணலாம்.
# மக்கள் தொகை அங்கீகாரம்
# ஒருமுறை PIN அடிப்படையிலான அங்கீகாரம்
# பயோமெட்ரிக் முறையிலான அங்கீகாரம்
# பல காரணி அங்கீகாரம்