இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக இருப்பதால் ஆதாரில் உள்ள தகவல்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டு வைத்திருப்பவரின் பெயர், பாலினம்,முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க வேண்டும்.
ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்வதாக இருந்தால் அந்த மொபைல் நம்பருக்கு தான் ஓடிபி வரும். அதனை பதிவிட்டு தான் அப்டேட் செய்ய முடியும்.இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் நம்பரை அப்டேட் ஆக வைத்திருக்க ஆதாரம் அமைப்பு மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒருவேளை உங்களின் சரியான மொபைல் நம்பர் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பதற்கு https://myaadhar.uidai.gov.in/verify-email-mobileஎன்ற அணி மூலமாக மொபைல் நம்பர் மட்டுமல்லாமல் இமெயில் ஐடியையும் சரிபார்த்துக் கொள்ள முடியும்.