இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் அவனுமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை இன்னொருவர் பயன்படுத்த முடியாது.ஆனால் ஆதார் கார்டு விவரங்களை திருடி பலரும் மோசடி செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
அதாவது ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி மற்றும் பாஸ்வேர்டு போன்ற தகவல்களை போன் மூலமாக அல்லது எஸ் எம் எஸ் மூலமாக கேட்டு தெரிந்து மோசடி நிகழ்கின்றது. வங்கியில் இருந்து அல்லது ஆதாரம் அமைப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.எனவே இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆதார் அமைப்பு சார்பாக ஒருபோதும் ஓடிபி போன்ற விவரங்கள் கேட்கப்படாது எனவும் அதை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.ஒருவேளை உங்களின் ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் செய்வதாக இருந்தால் நீங்கள் அதை ஆன்லைன் மூலமாக செய்து கொள்ளலாம் இல்லை என்றால் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் சென்று அப்டேட் செய்யலாம் என தெரிவித்துள்ளது.