இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. எனவே ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
இந்நிலையில் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது தங்களின் அடையாளச் சான்று மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பதை அவசியமாக்கும் வகையில் ஆதார் ஒழுங்குமுறை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணைய மூலமாக புதுப்பிப்பதற்கான வசதியை UIDAI ஏற்படுத்தியுள்ளது. இணையதளம் மற்றும் செயலி மூலமாக இணையவழியில் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது ஆதார் பதிவு மையங்களுக்கு நேரடியாக சென்று விவரங்களை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.