அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிக சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது வேறு சிம் கார்டில் இருந்து பிஎஸ்என்எல் சிம் கார்டிற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேறு நிறுவனம் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறினால் இலவசமாக 5 GB கிடைக்கும். இந்த சலுகை ஜனவரி 15ம் தேதி வரை கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஒரு கண்டிஷன் உள்ளது. அதாவது வேறு நெட்வொர்க்கிலிருந்து பிஎஸ்என்எலுக்கு ஏன் மாறுகிறோம் என்பதற்கான காரணத்தை வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதற்கான ஆதாரத்தை காட்டினால் மட்டுமே இலவச 5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.