தற்போது வங்கிக் கணக்குகளில் கணக்கு தொடங்கும் செயல் முறையானது தற்போது மிகவும் எளிமையாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால் வங்கிக்கு சென்று கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் வீட்டிலேயே இந்த வேலையை ஆன்லைனில் முடித்துக்கொள்ளலாம். இதன் காரணமாகவே இப்போதெல்லாம் நிறைய பேர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து இருக்கின்றார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் கணக்கு தொடங்குவது நன்மையா அல்லது தீமையா என்று குழப்பத்தில் பலபேர் இருக்கின்றனர்.
வீட்டுக்கடன், பிஎஃப் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக நிறையவே தற்போது நிறைய வங்கி கணக்குகளை திறந்து வைத்திருக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலமாக அந்த கணக்குகளை எளிதாக பராமரிக்க முடியும். மேலும் அந்த பணிகளை முடிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக வட்டி விகிதங்கள் டெபிட் கார்டு, காப்பீடு வங்கி, லாக்கர்கள், கடன் போன்ற பல்வேறு விஷயங்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகின்றது.
வெவ்வேறு வங்கி கணக்குகளில் கணக்கு தொடங்குவது மூலமாக இந்த வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை காப்பீடு கிடைக்கின்றது. சில காரணங்களால் வங்கி நிலை மோசமாகி விட்டால் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதை விட அதிக பணம் உங்கள் கணக்கில் இருந்தாலும் உங்களுக்கு அவ்வளவு தான். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் பணத்தை காப்பீடு மூலமாக பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் பல வங்கி கணக்குகளை திறப்பது நல்லது. மேலும் நிறைய வங்கி கணக்குகளை வைத்து பெரிய நன்மை என்னவென்றால் நீங்கள் வெவ்வேறு வங்கிகளின் டெபிட் கார்டுகளை வைத்திருப்பீர்கள்.
இதன் மூலமாக நீங்கள் பரிவர்த்தனை கட்டணமும் செலுத்தாமல் உங்கள் அருகிலுள்ள ஏடிஎம் இல் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நிறைய வங்கி கணக்கில் வைத்திருப்பதால் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. அதாவது பல வங்கி கணக்குகளை வைத்திருப்பதன் மிகப்பெரிய தீமை என்னவென்றால் அவற்றை நம்மால் சரியாக பராமரிக்க முடியாமல் போய்விடும். அதுமட்டுமல்லாமல் அவற்றில் பலர் செயல்படாமலேயே முடங்கிவிடும். இதுபோன்ற சூழ்நிலையில் கணக்கு வைத்திருப்பவர்களின் பான் கார்டு மற்றும் ஆதார் தகவல்களை திருடுவதன் மூலமாக மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்திருந்தால் அந்த கணக்குகள் மற்றும் அதில் பதிவு செய்யப்பட்ட தொகை பற்றிய தகவல்களை ஐடி ரிட்டன் தாக்கல் செய்யும்போது அவர் அளிக்க வேண்டும். மேலும் இது சற்று சிரமமான ஒன்றாகும். ஒவ்வொரு வங்கி கணக்கின் அப்டேட்களையும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் கடினமாகும். இந்த சூழ்நிலையில் தாக்கலில் தவறு ஏற்படலாம் எந்த ஒரு வங்கியிலும் கணக்கு தொடங்கும் போது அதில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் கட்டணம், ஏடிஎம்கட்டணம், செக் புக் கட்டணம் போன்ற பல வருடாந்திர கட்டணங்களுக்கு கட்டணங்களும் செலுத்த வேண்டியிருக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் கணக்கு திறந்தால் உங்கள் செலவுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகள் பல வங்கி கணக்குகள் திறக்கப்படும் போது அதன் கணக்கு எண் மற்றும் கடவுச் சொல்லை நினைவில் வைத்துக் கொள்வதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது. பெரும்பாலும் பலர் தங்களது ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது அவர்களால் பரிவர்த்தனை செய்ய முடியாமலும் போகின்றது.