வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரும் தங்களது பண பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அவ்வகையில் கரூர் வைசியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏடிஎம் பண பரிவர்த்தனை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் வைஸ்யா வங்கியில் மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளது. அதாவது பிளாட்டினம், பிரஸ்டீஜ் மற்றும் வழக்கமான ஏடிஎம் கார்டு ஆகிய மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளன.
அதன்படி பிளாட்டினம் கார்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க முடியும். பிரஸ்டீஜ் காரட்டில் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்க முடியும். வழக்கமான ஏடிஎம் கார்டில் 30 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் எடுத்துக் கொள்ள முடியும். வெளிநாட்டில் உள்ளவர்கள் கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 125 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.
அதனைப் போல மெட்ரோ ரகங்களில் ஒரு மாதத்தில் மூன்று முறை மட்டுமே இலவசமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியும். மெட்ரோ அல்லாத இதர நகரங்களில் ஐந்து முறை பணம் எடுக்கலாம். இதனைத் தாண்டி பணம் எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். இதனைப் போலவே ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளது. அதனை வாடிக்கையாளர்கள் அனைவரும் தெரிந்து வைத்துக்கொண்டால் பணம் எடுக்கும் போது கூடுதல் கட்டணங்கள் செலுத்துவதை தவிர்க்க முடியும்.