தற்போதைய காலகட்டத்தில் பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். பணம் இல்லாத சமயத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்து வாங்குகிறார்கள். ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலர் அதை வேண்டாம் என்று நினைப்பார்கள். காரணம் கிரெடிட் கார்டு என்பது உங்களை கடன் வலையில் சிக்க வைக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் நிறைய நன்மைகள் உள்ளது.
அதனை சரியாக கையாளுவதற்கு தனித்திறமை வேண்டும். அதை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது மற்றும் பிரச்சினைகளில் சிக்காமல் எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது என்பது பற்றி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெபிட் கார்டுகள் குறித்தும் எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.
1. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது ஸ்வைப்பிங் மெஷின்களை பயன்படுத்தும்போது அக்கம்பக்கத்தில் கவனமுடன் இருப்பது அவசியம்.
2. பிறகு நெம்பரை பதிவிடும் போது வேறு யாரும் அதனை பார்த்து விட கூடாது. நீங்கள் கீபோர்டை மூடிக்கொள்ள வேண்டும்.
3. ஆன்லைன் வெப்சைட்களில் ஷாப்பிங் செய்யும்போது அந்த வெப்சைட் அதிகாரப்பூர்வமானதா என்பதை கட்டாயம் பரிசோதனை செய்து விட்டு அதன் பிறகு ஷாப்பிங் செய்வது நல்லது.
4. ஆன்லைன் பேக்கிங் வசதியின் மூலமாக கார்டு பரிவர்த்தனைக்கான வரம்பு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதாவது 50 ஆயிரம் ரூபாய் லிமிட் கொண்ட காட்டில் ஒரு மாதத்தில் 30 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடுதல் நல்லது.
5.உங்களின் தேவையை பொறுத்து சரியான திட்டமிடலுடன் செலவு செய்தால் வீண் செலவுகளை குறைக்கலாம்.
இவ்வாறு உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.