கிரெடிட் கார்டுகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு என்பது அதிகமாக செலவினங்களை தூண்டும் என சிலர் நினைக்கிறார்கள். இதனால் பிரச்சினை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. கிரெடிட் காடுகளை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம். கிரெடிட் கார்டு என்பது குறைந்தபட்ச நிலுவைத் தொகை என்பதைக் குறிக்கிறது. உங்கள் கார்டின் கணக்கை நீங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாங்கிய தொகையை செலுத்த வேண்டிய கடைசி தேதிக்கு முன்பாக செலுத்தினால், கிரெடிட் கார்டின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம். ஆனால் கிரெடிட் கார்டில் வாங்கிய தொகையை செலுத்தாமல் குறைவான தொகையை செலுத்தி மீதி பாக்கி வைத்திருந்தால் அதற்கான வட்டியை செலுத்த வேண்டும். இதனையடுத்தே கிரெடிட் கார்டுகளின் வட்டி ஒரு வருடத்திற்கு 40 சதவீதம் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். உங்கள் கார்டில் ரூபாய் 30,000 நிலுவையில் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
இந்த பணத்தை நிலுவை தேதி முடிவடைந்த அதற்கு முன்பாக கட்டலாம். இல்லையெனில் நிலுவை தேதிக்கு முன்பாக ரூபாய் 1500 குறைந்தபட்ச தொகையாக கட்டிக் கொள்ளலாம். ஆனால் குறைந்த பட்ச நிலுவை தொகையை கட்டுவதால் மீதி இருக்கும் பணத்திற்கான வட்டியை செலுத்த வேண்டும். நீங்கள் தேதி முடிவதற்கு முன்பாக முழு பணத்தையும் கட்டிவிட்டால் அதற்கு வட்டி வசூலிக்கப்படாது. இதனையடுத்து நிலுவைத் தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் அதை தாமதமாக கட்டிக் கொள்ளலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி கட்டும் போது அதற்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் உங்கள் கார்டில் நிலுவைத் தொகை இருக்கும் போதே நீங்கள் கூடுதலாக பணம் எடுத்தால் நீங்கள் பணம் எடுத்த தேதியிலிருந்து அதற்குரிய வட்டியை கட்டாயம் செலுத்த வேண்டும். இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்