Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும் போது பலருக்கு கிழிந்த ரூபாய் நோட்டு வந்திருக்கும். மிஷினில் சிக்கி நோட்டு கிழிந்திருக்கலாம். அவ்வாறு கிழிந்த நோட்டு உங்களிடம் இருந்தால் அதனை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். ஏடிஎம்களில் கிழிந்த நோட்டுகள் வந்தால் பரவாயில்லை. பெரும்பாலான சமயங்களில் சில்லரை மாற்றும் போது நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டு நம்மிடம் வந்து சேரும். இதுபோன்ற கிழிந்த பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு வங்கிகள் வேறு நோட்டுகளை மாற்றி தருகின்றன. ஆனால் நிறைய பேருக்கு அது தெரிவதில்லை. ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று நீங்கள் எழுதி தரவேண்டும். பணம் எடுத்த தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். பணம் எடுத்ததற்கான ரசீது மற்றும் எஸ்எம்எஸ் போன்ற விவரங்கள் அனைத்தும் தேவைப்படும். ஏடிஎம்களில் எடுக்காமல் உங்களிடம் வேறு வகையில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்து இருந்தாலும் அதையும் நீங்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி ரூபாய் நோட்டுகள் கிழிந்திருக்கும் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட மதிப்பில் வேறு நோட்டுகள் உங்களுக்கு வழங்கப்படும். அதே ருபாய் நோட்டு மதிப்புக்கு பெரும்பாலும் கிடைக்காது. மிக மோசமாக கிழிந்திருக்கும் நோட்டுகளை நீங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம். இனி உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் கவலைப்படாமல் அதனை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |