Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. இனி கவலையை விடுங்க…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு……!!!!!

நாம் கடைகளுக்கு போகும்போதோ, பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும்போதோ சில கிழிந்த ரூபாய் நோட்டுகளானது நம்மிடையே வருவது வழக்கம் ஆகும். ஆனால் நாம் அதை வேறு யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கும்போது பல பேர் அதனை வாங்க மறுத்து விடுகிறார்கள். மேலும் சந்தையிலும் கிழிந்த நோட்டை மாற்றும்போதும் தடங்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பயப்பட வேண்டிய அவசியமோ, சிதைந்த நோட்டை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமோ கிடையாது. ஏனெனில் நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை பின்பற்றி அனைத்து வங்கியிலிருந்தும் கிழிந்த நோட்டுகளை ஈஸியாக மாற்றிக் கொள்ளலாம். ஆகவே அதுபோன்ற நோட்டுகளை மாற்றிக்கொள்ள வங்கிகளானது மறுப்பு தெரிவிக்க இயலாது. அவ்வாறு மறுப்பு தெரிவித்தால் அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

ஆனால் கிழிந்த நோட்டின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அதன் மதிப்பு குறையும் என்பது கவனிக்கத்தக்கது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது. அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் கிழிந்த நோட்டை வங்கிக்கு எடுத்துச்சென்றால், அதில் காந்திஜியின் படம், ஆர்பிஐ கவர்னரின் கையெழுத்து, வாட்டர்மார்க் மற்றும் வரிசை எண் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பதை வங்கி முதலில் சரிபார்க்கும். அவ்வாறு குறிப்பிட்ட அனைத்தும் இருந்தால் பின் ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு வங்கி மறுப்பு தெரிவிக்காது.

அதன்பின் தங்களிடம் 5, 10, 20 மற்றும் 50 ரூபாய் ஆகிய குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் இருந்து, அதன் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தெரியும் அடிப்படையில் இருந்து, அதன் ஒரு பகுதியேனும் நன்றாக இருந்தால் அந்த நோட்டை வங்கியிலிருந்து எளிதாக மாற்றி கொள்ளலாம். மேலும் 20க்கும் அதிகமான கிழிந்தநோட்டுகள் இருக்கும் நிலையில், அதனுடைய  மதிப்பானது 5,000 ரூபாய்க்கு அதிகம் இருந்தால் அவற்றை மாற்றுவதற்கு தாங்கள் கட்டணம் செலுத்தவேண்டும். அவ்வாறு கட்டணம் செலுத்திய பின் வங்கி ரூபாய் நோட்டை மாற்றும். மேலும் துண்டு துண்டாகக்கூட கிழிந்து இருந்தாலும் அதை மாற்ற முடியும். இருப்பினும் இந்த ரூபாய் நோட்டின் துண்டுகளை அருகிலுள்ள ரிசர்வ் வங்கியினுடைய கிளைக்கு அனுப்பவேண்டும். அப்போது வங்கி கணக்குஎண், ஐஎப்எஸ்சி குறியீடு மற்றும் நோட்டின் மதிப்பு போன்றவற்றை எழுதி அனுப்ப வேண்டும்.

Categories

Tech |