இந்தியாவில் மதிப்பு மிக்க ஒரு பொருளாக தங்கம் உள்ளது. தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு கருவியாகும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு பலரும் தங்களிடம் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். அவ்வாறு நகையை வைத்து கடன் வாங்குவதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்ற விவரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளுக்கு பல்வேறு வங்கிகளில் எவ்வளவு வட்டி செயல்பாட்டில் உள்ளது என்பதை பார்த்து கடன் வாங்கலாம்.இந்தியாவின் முன்னணி வங்கிகளில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மணப்புரம்!
வட்டி விகிதம் – 29% வரை
கடன் தொகை – ரூ.1.5 கோடி வரை
கடன் காலம் – 3 மாதங்கள்
எஸ்பிஐ!
வட்டி – 7.30% முதல் 7.50% வரை
கடன் தொகை – ரூ.20,000 முதல் ரூ.50 லட்சம் வரை
கடன் காலம் – 36 மாதங்கள் வரை
ஹெச்டிஎஃப்சி!
வட்டி – 11% முதல் 16% வரை
கடன் தொகை – ரூ.25,000 முதல் (கிராமப்புறங்களில் ரூ.10,000)
கடன் காலம் – 3 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை
முத்தூட் ஃபைனான்ஸ்!
வட்டி – 12% முதல் 27% வரை
கடன் தொகை – அதிகபட்ச வரம்பு இல்லாமல் ரூ.1,500
கடன் காலம் – 7 நாட்கள் முதல் 36 மாதங்கள் வரை
ஆக்சிஸ் பேங்க்!
வட்டி – 13.50% முதல்
கடன் தொகை – ரூ.25,001 முதல் ரூ.25 லட்சம் வரை
கடன் காலம் – 6 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை
கனரா பேங்க்:
வட்டி – 7.35% முதல்
கடன் தொகை – ரூ.5,000 முதல் ரூ.35 லட்சம் வரை
கடன் காலம் – 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை
பேங்க் ஆஃப் பரோடா!
வட்டி – 9.00% முதல் 9.15% வரை
கடன் தொகை – ரூ.25 லட்சம் வரை
கடன் காலம் – 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை
கர்நாடகா பேங்க்!
வட்டி – 8.49% முதல் 8.79% வரை
கடன் தொகை – ரூ.25 லட்சம் வரை
கடன் காலம் – 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை
பஞ்சாப் நேஷனல் பேங்க்!
வட்டி – 8.75% முதல் 9% வரை
கடன் தொகை – ரூ.25,000 முதல் ரூ.10 லட்சம் வரை
கடன் காலம் – வங்கியைப் பொறுத்தது
கோடக் மகிந்திரா பேங்க்!
வட்டி – 10% முதல் 17% வரை
கடன் தொகை – ரூ.20,000 – ரூ.1.5 கோடி
கடன் காலம் – 4 ஆண்டுகள் வரை
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா!
வட்டி – 9.05% முதல்
கடன் தொகை – ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை
கடன் காலம் – 12 மாதங்கள் வரை
இந்தியன் பேங்க்!
வட்டி – 7% முதல்
கடன் தொகை – ரூ.75 லட்சம் வரை
கடன் காலம் – 36 மாதங்கள் வரை
ஐடிபிஐ பேங்க்!
வட்டி – 7% முதல்
கடன் தொகை – ரூ.20 லட்சம் வரை
கடன் காலம் – 12 மாதங்கள் வரை
இந்தஸ் இந்த் பேங்க்
வட்டி – 10% முதல் 16.50% வரை
கடன் தொகை – ரூ.10 லட்சம் வரை
கடன் காலம் – 24 மாதங்கள் வரை