Categories
டெக்னாலஜி

உங்ககிட்ட பழைய மொபைல் இருக்கா?…. இனி இதை யூஸ் பண்ண முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இடையே மிகவும் பிரபலமாகவுள்ள செயலி எனில் அது வாட்ஸ்அப் தான். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இச்செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. இதற்கிடையில் அடிக்கடி வாட்ஸ்அப் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் பல வித புதுபுது அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. மென் பொருள் கோளாறால் சில சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

தொழில் நுட்பத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருவதால் சில பழைய சாதனங்களில் இருந்து எங்களது சேவையை நிறுத்துகிறோம் என்று வாட்ஸ் அப் அறிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டிலும் இயங்குகிறது. மேலும் KaiOS என்ற தளம் வாட்ஸ்அப் செயலியை ஆதரிக்கிறது. ஆப்பிள் iponeகள் வாட்ஸ்அப் பயன்பாட்டை பெறும். அதே நேரம் ஐஓஎஸ் 11 மற்றும் அதன் சப்சீக்வெண்ட் அப்டேட்களும் வாட்ஸ்அப் செயலியை ஆதரிக்காது. பழைய ஐபோன்கள் பயன்படுத்துவோரின் சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டை தொடர்ந்து இயக்க முடியாது. கடந்த 2012ல் ஆப்பிள் ipone 5 துவங்கப்பட்டது.

இவை கிட்டத்தட்ட 10 வருடங்கள் பழமையானது ஆகும். இதற்கு ஒரேவழி வாடிக்கையாளர்கள் அவர்களது பழையசாதனத்தை புது ஆப்பிள் ஐபோன் (அ) ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் சாதனத்துக்கு மாற்றுவதுதான். உங்களது சாதனத்தின் வாட்ஸ்அப் இயங்கினால் சாதனத்தை அப்டேட் செய்யுமாறு வாட்ஸ் அப் உங்களுக்கு நினைவுபடுத்தும். உங்களது சாதனம் வாட்ஸ் அப்பை ஆதரிக்கும் என்பதை சரிபார்க்க “செட்டிங்ஸ்” என்பதற்கு சென்று ஜெனரல் என்பதைத் தட்ட வேண்டும். அதன்பின் சாஃப்ட்வெர் அப்டேட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்களது சாதனம் இணையவசதியுடன் இருக்கவேண்டும். ஆண்ட்ராய்டு சாதனத்தை பொறுத்தவரையிலும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச் மற்றும் அதற்குப் பிந்தைய வெர்ஷன்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |