Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ கட்டாயம் இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இனி உங்கள் பான் கார்டில் திருத்தங்கள் செய்வது ரொம்ப ஈஸி. அதனை விரிவாக இப்போது பார்க்கலாம்.பான் கார்டில் திருத்தம் செய்வது எப்படி? பான் கார்டு வாங்க பணம் கட்டணுமா? இன்னும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

 

பான் கார்டு எப்படி வாங்குவது?

ஆன்லைன் மூலமாக NSDL இணையதளத்தில் பான் கார்டு பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். இது தவிர பான் கார்டு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் கார்டான e-PAN கார்டை சில நிமிடங்களிலேயே வாங்கிவிடலாம்.

பான் – ஆதார் இணைப்பது எப்படி?

வருமான வரித் துறையின் e-Filing இணையதளத்தில் ஆதார் கார்டையும், பான் கார்டையும் எளிதாக நீங்கள் இணைத்துவிடலாம்.

பான் கார்டு வாங்க பணம் கட்டணுமா?

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க 93 ரூபாய் + ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். வெளிநாட்டுக்கு பான் கார்டு அனுப்பப்பட வேண்டுமெனில் 864 ரூபாய் + ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும்.

உங்கள் பான் கார்டு எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்?

ஒரு முறை பான் கார்டு வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது செல்லுபடியாகும். ஏனென்றால் வீட்டு முகவரி மாற்றம் போன்ற தகவல்களை அப்டேட் செய்துவிட வேண்டும்.

பான் கார்டில் திருத்தம் செய்வது எப்படி?

பான் கார்டு விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் NSDL, UTIITSL இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு குறித்த விவரங்கள் அனைத்தையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

Categories

Tech |