இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றைப் போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம் தான். வருமான வரி தொடர்பான வேலை தவிர வங்கி தொடர்பான பணிகளுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. ஒருவேளை உங்களிடம் பான் கார்டு இல்லை என்றால் அதனை வாங்குவது மிகவும் சுலபம்தான். வீட்டிலிருந்தபடியே பான் கார்டு வாங்கிவிடலாம். இதற்கு ஆன்லைன் மூலம் இறுதியில் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் பான் கார்டில் ஏதாவது தவறுகள் இருக்கும் பட்சத்திலும் அதனை திருத்தும் வசதியும் உள்ளது.
இதற்கு பான் கார்டு வாங்குவதற்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தால் NSDL (https://tin.tin.nsdl.com/pan/index.html) அல்லது UTITSL (https://www.pan.utiitsl.com/PAN) என்ற இணையதள பக்கத்திலிருந்து பான் கார்டுக்கு எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஜிஎஸ்டி தவிர 93 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும். உங்களிடம் கிரெடிட் கார்டு மட்டும் டெபிட் கார்டு இருந்தால் மட்டும் போதும். அதன் பிறகு நீங்கள் ஒரு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். அதில் தனிப்பட்ட அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு சில ஆவணங்களை வழங்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆவணத்தின் புகைப்பட நகலை நீங்கள் அனுப்பியவுடன் பான் கார்டுக்கு பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும். பத்து நாட்களுக்குள் உங்கள் கைக்கு பான் கார்டு வந்து சேரும்.