டிஜிட்டல் நிதிச் சேவை தளமான பேடிஎம் எந்தவொரு சொத்து அடமானம் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை எம்.எஸ்.எம்.இ (MSME) வியாபாரிகள், சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பேடிஎம்மின் இந்த சேவையை இந்த நிதியாண்டிற்குள் 1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த கடன் சேவையை வழங்கி வரும் பேடிஎம், பல்வேறு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களுடன் சேர்ந்து இரண்டு நிமிடங்களுக்குள் கடன் பெற உதவுகின்றது. பேடிஎம்மில் பெறும் இந்த கடனுக்கு 18 – 36 மாதங்களில் திருப்ப செலுத்தும் அவகாசம் கிடைக்கும். இதனடிப்படையில் உங்களது இஎம்ஐ விகிதமும் இருக்கும்.
பேடிஎம்மின் இந்த சேவையை சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. பேடிஎம்மின் இந்த சேவை சிறிய நகரங்களிலிருந்து வந்து, பெரிய வங்கிகளிடமிருந்து கடன் எடுக்க முடியாத பயனர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
ஆக இனி நீங்கள் தனிநபர் கடன்(Personal Loan) பெற வேண்டுமெனில், வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, இனி வீட்டில் இருந்த படியே பேடிஎம் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே கடனுக்கு அப்ளை செய்யலாம். கடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள்பேடிஎம் செயலியில் நிதி சேவைகள் பிரிவுக்குச் சென்று பின்னர் தனிநபர் கடன்கள் பகுதியை கிளிக் செய்து எளிதாக கடன் பெறமுடியும்.