Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட PF கணக்கு இருக்கா?… அப்போ கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…. முக்கிய ரூல்ஸ் இதுதான்….!!!!

இந்திய ஊழியர்கள் அனைவருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதி கணக்கு பயன்பாட்டில் இருக்கிறது. அவ்வாறு பிஎப் கணக்கு இல்லாத ஊழியர்கள் தற்போது புதிதாக கணக்கு தொடங்குவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். பிஎஃப் கணக்கு பற்றி பலரும் அறியாத சில முக்கிய விதிமுறைகள் உள்ளன.

அதாவது ஒரு நபர் சம்பளம் பெறாமல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தால் அவர் பிஎஃப் கணக்கு வைத்திருக்க முடியாது. பொதுவாக நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறுவருக்கு மட்டுமே பிஎஃப் கணக்கு உள்ளது.நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பிஎஃப் கணக்கை ஒரு ஊழியரால் நிறுத்தவோ அல்லது துறக்கவும் முடியாது. பிஎஃப் கணக்கு வைத்திருக்க எந்த ஒரு கால வரமும் கிடையாது.ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டாலும் பிஎஃப் கணக்கு கட்டாயம் தொடரும்.

மூன்று வருடங்களுக்கு மேல் பிஎப் கணக்கில் பங்களிப்பு தொகை வரவில்லை என்றால் அந்த கணக்குக்கு வட்டி வழங்கப்படுவது நிறுத்தப்படும்.ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்தால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியே ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்குகளை EPFO நிர்வகிக்கிறது.

Categories

Tech |