Categories
ஆன்மிகம் ஜோதிடம்

உங்களது பெயரின் முதல் எழுத்து C ஆ, உங்களை பற்றி அறிய இதை படியுங்க…!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து C என்றால், உங்களின் குணநலன்கலை பற்றி அறிய இந்தசெய்தி தொகுப்பில் காணலாம்: 

C என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டிருக்கும் நபர்கள், சுதந்திரமாக இருக்க ஆசை கொள்வார்கள். தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்கள். பட்டாம் பூச்சிகளைப் போல் வாழ விரும்புபவர்கள். இவர்கள் வாழ்க்கை வாழ தெரிந்தவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றையும் நேர்மறையாக சிந்திக்க கூடியவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள்.

இவர்கள் எப்போதும் வெளிப்படையாக, உற்சாகமாக இருப்பவர்கள். இவர்களை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. இவர்களுடைய உரையாடல்கள் தெள்ளத் தெளிவாக இருக்கும். இயற்கையிலேயே இவர்கள் வெள்ளந்தியாக இருப்பார்கள். அதே சமயம் அதிக திறமை உள்ளவர்களாகயும் இருப்பார்கள்.

எளிதாக அனைவருடனும் பழகி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார். தன்னை ஒருவர் காயப்படுத்தும் நிலையில், அதை அவர்களால் சகித்து கொள்ளவே முடியாது. ஆதலால் மீண்டும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இவர்களிடம் கிடையவே கிடையாது. இவர்கள் சிறந்த நகைச்சுவையாளராக இருப்பார்கள். இவர்கள் சாதாரணமாக பேசுசும் வார்த்தைகள் கூட மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக அமைகிறது.

இவர்களுக்கு ஒருவரை பிடிக்காத பட்சத்தில், அவர்களை பழிவாங்குவதக்கு, இவர்கள் கொள்ளும் யுக்தியை யாரும் சிந்தித்து கூட பார்க்க முடியாது. இவர்களின் யூகிப்பு, மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கும். தனித் திறமையாளர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்கும் திறமை இருக்கும். அதுவும்  அவர்களுக்கே தெரியாமல் இருக்கும்.

இந்த நபர்கள் பெரும்பாலும் செலவாளியாகவே இருப்பார்கள். இவர்களிடம் காசு இருந்தால் கையில் தங்கவே தங்காது. அதற்காக இவர்கள் ஊதாரிதனமாக இருக்க மாட்டார்கள். இவர்கள் கையிலிருக்கும் இருப்புக்கு ஏற்றவாறு, இவர்களுக்கு ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். இவர்கள் மிகவும் கலகலப்பாகவும், இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாகவும் இருக்கும்.

இவர்கள், சரியான நபரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இவர்களுக்கு உண்மை உள்ளவர்களாக இருப்பார்கள். பொழுது போக்கிற்காக இவர்கள் யாரிடமும் பழகக் மாட்டார்கள். இவர்களிடம் இருக்கும் குறையை சொன்னால் அது பழிவாங்கும் குணம் மற்றும் இரக்கமற்ற குணமாக அமையலாம். எதையும் ஆழ்ந்து சிந்திக்காமல் மேலோட்டமாகவே சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். எவரையும் எளிதில் நம்புவது இவர்களது பலவீனமாக இருக்கும்.

Categories

Tech |