Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களது மகள் என்னுடன் இருக்கிறாள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கு சென்ற சுதாகரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் மாணவி வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர்.

அப்போது மாணவியின் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுதாகரன் உங்களது மகள் என்னுடன் தான் இருக்கிறார். எனவே அவரை தேட வேண்டாம் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |