இந்திய அரசு துணை கண்டத்திலேயே திமுக அரசுதான் நான்கு மாதங்களுக்குள் 505 வாக்குகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவினர் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். எந்தெந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள் என்று பட்டியலிட்டு காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதியான சூழலில் இருந்தது.
ஆனால் தற்போது ரவுடிகள் அராஜகம் தொடர்ந்துள்ளது. தற்போது ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதில் இருந்தே தெரிகிறது தமிழகத்தில் எந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்று. திமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் 50% ஆவது நிறைவேற்றி உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் சிறு குழந்தைகளின் “ஆசை தோசை” விளையாட்டு போல தான் அவர்களின் கருத்து உள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.