Categories
தேசிய செய்திகள்

உங்களிடமுள்ள பான் கார்டு ஒரிஜினலா?…. அறிய இதோ ஈஸியான வழி….!!!

இந்தியாவில் தனிமனிதனுக்கு மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஆதார் கார்டை போல, பான் கார்டும் முக்கிய பங்கு வைக்கிறது. இந்நிலையில் சமீப நாட்களாக பான் கார்டு தொடர்பாக பல பிரச்சனைகள் வெளியாகி வருகின்றன. அதாவது ஒருவருடைய ஆதார் கார்டை பயன்படுத்தி இன்னொருவர் மோசடி செய்து கடன் வாங்கி வருவதாக பல புகார்கள் எழுந்துள்ளன.

மேலும் போலி பான் கார்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உங்களிடம் உள்ள பான் கார்டு உண்மையானதா போலியானதா என்பதை அறிய ஆன்லைன் மூலம் ஈஸியான வழி  கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • முதலில் வருமானவரித் துறையின் இணையதளம் https://www.incometax.gov.in/iec/foportal செல்ல வேண்டும்.
  • அதன் பின் மேலே உள்ள ‘Verify Your PAN Card’ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து பான் கார்டு விவரங்களை (பெயர், பிறந்த தேதி, உட்பட்ட தகவல்கள்) நிரப்ப வேண்டும்.
  • இதனை தொடர்ந்து சரியான தகவலை நிரப்பிய பின், நிரப்பப்பட்ட தகவல் உங்கள் பான் கார்டுடன் பொருந்துகிறதா ,இல்லையா என்ற தகவல் வரும்.

இதன் மூலம் உங்களது பான் கார்டின் உண்மை தன்மையை அறிய முடியும்.

Categories

Tech |