நம்மிடம் இருக்கும் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.